நேற்று காலை 10.30 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஹட்டன் கல்வி திணைக்களத்தின் கீழ் இயங்கிக் வரும் கோட்டம் மூன்று சாமிமலை பகுதியில் உள்ள கவரவில்லை தமிழ் தேசிய பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யபட்டது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் தேசிய நீர் வடிகால் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ ஆ.ஜுவன் தொண்டமான் பணிப்புரை யில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரம் ஆலோசனைக்கமைய மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவி திருமதி கோவிந்தன் செம்பவள்ளி இன்று தேசிய குடி நீர் நாளில் காலை 11 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஹட்டன் தேசிய நீர் வடிகால் திணைக்களத்தின் அதிகாரி வைத்தியர் திரு.துஷார பெர்ணான்டோ, நீர் திட்டமிடல் பொறியியல் அதிகாரி திரு.ஆர்.எம்.எஸ்.கே.ரனதுங்க, வித்தியாலய அதிபர் திரு.வி.ஜெயபால்,உப அதிபர்.என், நிரஞ்சன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் சாமிமலை பகுதிக்கு பொறுப்பான முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் பங்கேற்க முன்னாள் பிரதேச சபையின் தலைவர் கோவிந்தன் செம்பவள்ளி கருத்து தெரிவிக்கையில் இப் பாடசாலையில் சுமார் 600 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தரம் ஆறு முதல் 13 வரை கல்வி பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக சுத்தமான குடிநீர் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகையால் அமைச்சர் முன் வந்து இப் பாடசாலைக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என முன் வந்து இன்று தேசிய குடி நீர் தினத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரைப்படம் ஆரம்பித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தது
டி சந்ரு, செ.தி.பெருமாள்