காசல்ரீ நீர்தேக்கம் தூய்மைக்கும் நன்நீர் மீன் பிடி தொழில் மேம்படவும் விசேட வழிபாடு!!

0
297

காசல்ரீ நீர்தேக்கம் தூய்மையானதாகவும் மீன் பிடி தொழிற்துறை மேம்படவும் விசேட வழிபாடொன்று 14.03.2018 இடம்பெற்றதுநன்நீர் மீன் பிடி தொழிற்துறையினரினால் அண்மைகாலமாக மீன் பிடி தொழில் பாதிப்படைந்ததையடுத்து காசல்ரீ நன்நீர் பிடி தொழிலாளர்கள் காசல்ரீ நீர்தேக்கத்திலே விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

காசல்ரீ நீர்தேக்கத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் 45 தொழிலாளர்கள் 14.03.2018 வழிபாட்டில் கலந்து கொண்டனர்

445 எக்டேயர் பரப்பளவை கொண்ட காசல்ரீ நீர் தேக்கமானது நோட்டன் விமலசுரேந்திர நீர் மின் நிலையம் லக்ஷபான நவ லக்ஷபான பொல்பிட்டிய போன்ற மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீர் வினியோகிக்கும் பிரதான நீர் தேக்கமாக காசல்ரீ நீர்தேக்கம் விளங்குகின்றது.

மேற்படி மின் உற்பத்தி நிலையங்களுக்கு சென்றடையும் நீர் களனி ஆற்றினூடாக கடலை சென்றடைகின்றது.

மலையகத்தில் பிரதான நீர்த்தேகமாக விளங்கும் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு பொகவந்தலாவ கெசல்கமுவ ஒயா அட்டன் டிக்கோயா ஆற்றினூடாகவும் நீர் சென்றடைக்கின்றது.

இவ்வாறு பெருந்தோட்ட பகுதிகளிடையே ஊடறுத்து செல்லும் ஆற்று நீரில் மண் மற்றும் கழிவுகளும் நீர் தேக்கத்தில் நிறைந்து காணப்படுகின்றது. களிமண் மற்றும் கழிவுகளின் அதிகரிப்பால் நீர்தேக்கதில் நீர் குறைவடைந்துள்ளதுடன் நீர் மாசடைந்தும் காணப்படுகின்றது.

01 (4) 01 10

இவ்வாறன நிலையில் பிரதான நீர் தேக்கத்தில் வருவாய் ஈட்டி குடும்பவாழ்வை முன்னெடுத்து செல்லும் 45 பேர் காசல்ரீ நன் நீர் மீன் பிடி சங்கத்தில் அங்கத்தவர்களாக இணைந்து தொழில் புரிந்து வருகின்றனர்.

இவ்வாறு குடும்ப வாழ்வை கொண்டு செல்லும் மேற்படி தொழிலாளர்களுக்கு அண்மை காலமாக மீன்கள் பிடிபடுவதில்லை எனவும் மீன் பிடி வலைகளில் மீன்கள் சிக்குவதில்லை என்றும் கவலை தெரிவித்தனர்.

கழிவுகளினால் நிறைந்து காணப்படும் காசல்ரீ நீர் தேக்கமானது மாசடைந்த நீர் கரும் பச்சை நிறத்தில் காணப்படுவதுடன் மீன்களுக்கு வீசும் வலைகளை மீன்கள் இலகுவாக இனம் கண்டு விலகிச்செல்வதாக மீன் பிடி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளொன்றுக்கு தலா 15 கிலோ கிராம் வரையில் மீன்கள் பிடித்து உல்லாச பிரயாணிகளுக்கும் நகர மக்களுக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு சென்றவர்கள் கடந்த ஒரு மாத காலமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந் நிலையில் காசல்ரீ நன்நீர் மீன் பிடி சங்கத்தினரின் ஏற்பாட்டில் காசல்ரீ நீர்தேக்க கரையோர பகுதியில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் தூய்மையான நீர்தேக்கமாகவும் மீன் பிடி தொழில் துறையை சிறப்பாக கொண்டுசெல்ல இறையசி வேண்டியே வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here