நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் 18.08.2018 அன்று காலை முதல் வான் மேவி பாய்கின்றது.இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதோடு, களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)