காசாவிற்குள் வான்வழியாக மனிதாபிமான உதவிகளை வீசியுள்ளதாக தெரிவித்துள்ள கனடா இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது என குற்றம்சாட்டியுள்ளது.
சிசி – 130 ஜே ஹேர்குலிஸ் விமானத்தை பயன்படுத்தி கனடாவின் ஆயுதப்படையினர் காசாவுக்குள் மனிதாபிமான உதவி பொருட்களை போட்டனர் என தெரிவித்துள்ள கனடா அரசாங்கம் 21600 பவுண்ட் மனிதாபிமான உதவிகளை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கனடாவின் ஆயுதப்படையினர் தங்கள் விமானங்களை பயன்படுத்தி முதல்தடவையாக காசாவுக்குள் மனிதாபிமான பொருட்களை போட்டுள்ளனர் என கனடா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கனடா எகிப்து உட்பட ஆறுநாடுகள் 120 உணவுப்பொதிகளை காசாவிற்குள் வீசியுள்ளன என எகிப்து தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் மனிதாபிமான அமைப்புகளிற்கு சவாலை தோற்றுவித்துள்ளன என தெரிவித்துள்ள கனடா மனிதாபிமான உதவிகளை தடுப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் இதனை உடனடியாக கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.