காசா முழுவதும் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் அதிகாலை முதல் உதவி தேடிய 31 பேர் உட்பட குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.
காசாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இஸ்ரேலின் இடம்பெறும் தாக்குதல்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பசியால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது என நாசர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
காசாவில் சமீப காலங்களில் பாரிய அளவிலான அழிவுடன் கூடிய தாக்குதல் இடம்பெறுவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மத்திய காசாவில் நடந்த மோதல்களின் போது ஒரு இராணுவ வீரர் ஒருவர் “கடுமையாக காயமடைந்தார்” என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேயில் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர் ஸ்டீவ் விட்காஃப், கட்டாரில் நடைபெறும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.