காசாவில் பாடசாலை மீது வான்வழித் தாக்குதல்! 50 பேர் பலி

0
157

வடகாசாவில் உள்ள அல்-ஃபகூரா எனும் பாடசாலையின் மீது இன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரடைந்து வரும் நிலையில், இன்று இஸ்ரேல் வடகாசா மீது வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

பலஸ்தீனிய அகதிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்டு வரும் பாடசாலை ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காசாவுக்குள் இரண்டு எரிபொருள் பாரவூர்திகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியிருந்தாலும், இதுவரை எந்தவொரு எரிபொருட்களும் கிடைக்கப் பெறவில்லை என பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எரிபொருள் தற்போது அத்தியாவசியமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் காசாவுக்குள் எந்தவொரு பாரவூர்திகளும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நாளாந்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் லீட்டர் எரிபொருள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here