காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக் கைதியின் காணொளி புதிய வடிவக்கொடுமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மெலிந்து பலவீனமாக இருப்பதைக் காட்டும் காணொளி, தமது பெற்றோரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளதாகக் குறித்த பணயக்கைதியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
தமது தடுப்பில் உள்ள 24 வயதான எவ்யதார் டேவிட்டின் காட்சிகளை ஹமாஸ் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.
இந்த காணொளி, இஸ்ரேல் மற்றும் மேற்கத்தியத் தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஒரு மனித என்புக்கூடு. எந்த நேரத்திலும் இறக்கக்கூடிய அளவுக்கு அவர் பட்டினியால் வாடுகிறார். அவர் மிகவும் அவதிப்படுகிறார்.
அவரால் பேசவே முடியாது, அவரால் நகரவே முடியாதுள்ளது என்று டேவிட்டின் சகோதரர் இலே தெரிவித்துள்ளார்.
தாம் பல நாட்களாகச் சாப்பிடவில்லை, தனக்குக் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்று குறித்த காணொளியில் பணயக்கைதியான எவியத்தார் டேவிட் குறிப்பிடுகிறார்.
ஹமாஸ் வெளியிட்ட காணொளியிலிருந்து இஸ்ரேலிய பணயக்கைதி எவியத்தார் டேவிட், காசா சுரங்கப்பாதையில் அடைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த பணயக்கைதி உட்பட்டவர்கள், 2023 அக்டோபர் 7, அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதலின் போது ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் காசாவில் ஹமாஸின் பிடியில் இன்னும் 50 பணயக்கைதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது அதிலும் 20 பேர் மாத்திரமே உயிருடன் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.