காசா மீதான தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்

0
20

காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசா போராளிகள் இடையே தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தை முன்வைத்த நிலையில் அதனை இஸ்ரேல் பிரதமர் ஏற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டது .

இந்நிலையில் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இதற்கமைய பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ட்ரம்பின் திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் அந்த அறிவித்துள்ளது.

இவ்வாறு போர் நிறுத்த முயற்சிகள் ஒரு புறம் நடைபெற்று வரும் சூழலில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது நேற்று முன்தினம் காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 53 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறும்.ஹமாஸ் நீடித்த அமைத்திக்கு தயாராக இருப்பதாக தாம் நம்புபதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here