காட்டு மிருகங்களை வேட்டையாடி விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் அக்கரபத்தனை பொலிஸாரால் கைது.

0
127

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை போபத்தலாவை காட்டுப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடி இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை அக்கரைபத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 08 கிலோகிராம். இறைச்சி மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பம் நேற்று (13) மாலை அக்கரபத்தனை போபத்தலா மெனிக்பாலம் கால் நடை தேசிய பண்ணையிலிருந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கால்நடை பண்ணையின் காவலாளி எனவும் அவருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியிலே வனப்பகுதியில் மான் மறை, பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நீண்ட காலமாக குறித்த சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகிய தகவலினையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், மீட்கப்பட்ட இறைச்சி, துப்பாக்கு உள்ளிட்ட பொருட்களுடன் நுவரெலியா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here