காணாமல் போன தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று (27) மாலை காலியில் உள்ள உனவடுன கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் குறித்த உறுப்பினர்கள் கனன்கே பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (27) சபைக்குச் சென்று கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, வெலிகம பிரதேச சபையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபைத் தலைவரை நியமிப்பதற்கான தேர்தலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தெற்கு உள்ளூராட்சி ஆணையாளர் சபை 30 நாட்களுக்குள் மீண்டும் கூடும் என்று எதிர்பார்த்து சபையை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.