ஆட்டுத்தொழுவத்திலிருந்து காணாமல் போன ஆடுகளை மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் ஆட்டுத்தொழுவத்திலிருந்த ஆறு ஆடுகளில் மூன்று ஆடுகள் 19.12.2018 அதிகாலை கானாமல் போனதாக உரிமையாளரினால் முறைப்பாடு செய்யபட்டிருந்த நிலையில் 20.12.2018 குடாகம பிரதேச வீட்த்தோட்டத்திலிருந்து கண்டு பிடித்து மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
80 ஆயிரம் ரூபா பெறுமதியான மூன்று ஆடுகளை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்ட்டு விசாரணைகள் தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா