மலையக மக்களுக்கான ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும் அதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவரை குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த தலைவர்களான சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 30,000 வீடுகளில் 15,000 வீடுகளுக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் வணக்கஸ்தளங்களுக்கும் உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. எனவே இந்த விடயத்தை யார் செய்தது என்று பெயர் பதித்துக் கொள்ளும் போட்டிகளை கைவிட வேண்டும் தற்போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் கூட அமைச்சரவையில் இல்லை.
அமைச்சு பதவி இல்லாவிட்டாலும் வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நல்லாட்சி காலத்தில் பயனாளிகளுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் அது காணி உரித்தாக மாற்றப்பட்டது. எனினும் நாம் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த காலப்பகுதியில் ஆயிரம் காணி உரிமங்கள் தயாரிக்கப்பட்டன.
அவற்றையே தற்போதைய பெருந்தோட்ட பிரதி அமைச்சர் அட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயனாளிகளிடம் கையளித்தார்.
ஆனால் இந்த அரசாங்கப் பொறுப்பேற்று ஓராண்டு கடந்தும் 237 அனுமதி பத்திரங்கள் மாத்திரமே தயாரிக்கப்பட்டுள்ளன அவற்றில் வெறுமனே பத்து உறுதி பத்திரங்கள் மாத்திரமே பண்டாரவாடையில் இடம்பெற்ற நிகழ்வின் போது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் எமது ஆட்சியில் முழுமையாக நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட ஆயிரம் வீடுகளையே மக்களிடம் கையளித்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.