காணி விடயம் தொடர்பில் ஒரு சிலர் சேறு பூச முற்படுகின்றனர்.

0
178

முகநூலில் தற்போது நோர்வூட் காணி விடயம் தொடர்பில் பொய்யான வதந்திகள் பரப்பி வருவதாகவும் அவை பற்றிய உண்மையான விடயம் தெரியாமலேயே வதந்திகள் பரப்புவதாகவும் நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமான காணியினை தனி நபர் ஒருவருக்கு 2500000.00 ரூபாவிற்கு விற்கப்பட்டுள்ளதாகவும் அவ்விடயம் தொடர்பில் தன்னையும் தொடர்புபடுத்தி தனக்கு சேறு பூசும் விடயத்தில் ஒரு குழு திரைமறைவில் செயற்பட்டு வருகின்றது..

அதாவது கடந்த வாரத்தில் நோர்வூட் பிரதேசத்தின் குறிப்பிட்ட காணியில் சிலரால் அத்துமீறிய வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாக எனக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய உடனடியாக அவ்வேலையினை தடுத்து நிறுத்தியதாகவும் நோர்வூட் பிரதேச சபை அதிகாரிகளால் 07.07.2022ம் திகதி, நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் முழுமையான தகவல்களை ஆவணங்களோடு நோர்வூட் பிரதேச சபையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவே தனக்கு சேறு பூச முற்படுவர்களுக்கும் அதேபோல பொய்யான வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தை வேலு குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here