எதிர்வரும் காலத்தில் காணிகளின் விலை குறையலாம் என பொருளாதார நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளதாக சிலுமின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது .
ஜனாதிபதியினால் சொத்துரிமை இன்றி தவித்த 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதி இம்மாதம் வழங்கப்பட்டது .
20 இலட்சம் மக்களுக்கு விற்பனை மற்றும் அடமானம் செய்யும் உரிமையுடன் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதால் காணிக்கான கேள்வி குறைந்து விலைகள் குறையலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக சிலுமின பத்திரிகை தெரிவிக்கிறது .