காதலால் ஏற்பட்ட விபரீதம் – கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 15 வயது சிறுமி

0
178

புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவ, டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலத்தின் 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் சிறுமியின் கல்வி நடவடிக்காக கையடக்க தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த சிறுமி கருவலகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனுடன் காதல் தொடர்பு வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனுடன் கடந்த இரு நாட்களாக குறுந்தகவல்கள் பரிமாற்றிக் கொண்டுள்ளார். அதன் பின்னர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மனரீதியான பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here