காதலிக்கு போதைப்பொருள் கொடுக்க வற்புறுத்திய காதலன்!

0
150

குருணாகலில் 20 வயதான யுவதிக்கு 22 வயதான நபர் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை பயன்படுத்த வற்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்த யுவதி, யுவதியின் தாய், உறவினர்கள் வெலிபென்ன பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தர்கா நகர் மீகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 22 வயதான நபர், கடந்த பல மாதங்களாக இந்த யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.அப்போது அந்த யுவதியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்த பலவந்தமாக பழக்கப்படுத்தினார் என்று அந்த யுவதி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

கண்ணாடி குவலைக்குள் போதைப்பொருளை போட்டு, ஏதோவொரு குழாயை தன்னிடம் கொடுத்து, அந்த கண்ணாடி குவலையின் கீழ், லைட்டர் அல்லது தீக்குச்சிகளாக தீமூட்டுவார்.

அதன்பின்னர், வெளிவரும் புகையை மூக்கில் இழுக்குமாறு வற்புறுத்துவார்.இவ்வாறுதான் தனக்கு​ ஹெரோய்ன் பயன்படுத்த பலவந்தமாக பழக்கப்படுத்தினார் என்றும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

போதையில் இருக்கும் போது, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவார் என்றும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தற்போது தலைமறைவாகியிருக்கும் இளைஞனை தேடிவரும் பொலிஸார், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை பருவக்காலத்தில் பெற்றோர்கள் மிகக் கவனமாக கண்காணிக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here