காதலிக்க மறுத்த ஆசிரியையின் அந்தரங்க புகைபடத்தை வாட்சப் குழுவில் பகிர்ந்த இளம் பிக்கு!!

0
162

இணையத்தளம் வழியாக பாடம் பாடம் நடத்திய தனது ஆசிரியையின் புகைப்படத்தின் முகப்பகுதியுடன் நிர்வாணப்படத்தை இணைத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த எம்பிலிப்பிட்டிய சூரியகந்தை விகாரையை சேர்ந்த 17 வயதான இளம் பௌத்த பிக்குவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் அந்த பிக்குவை கைது செய்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவல முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபரான இந்த இளம் பிக்கு இணையத்தள வழியாக நடத்தும் வகுப்பில் பங்கேற்றுள்ளதுடன் அவருக்கு ஆசிரியை மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது. வகுப்பு நடத்தப்படும் வட்ஸ் அப் குழு ஊடாக பிக்கு இதனை ஆசிரியைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆசிரியை பிக்குவை வட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கியுள்ளார். இதன் பின்னர் பிக்கு, அந்த ஆசிரியையின் புகைப்படத்துடன் நிர்வாணப் புகைப்படம் ஒன்றை இணைத்து, வட்ஸ்அப் சமூக ஊடகம் வழியாக பகிர்ந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியை செய்த முறைப்பாட்டுக்கு அமைய பிக்குவை கைது செய்ததாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேக நபரான பிக்குவை 5 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here