புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில் காதலர்கள் இருவரும் தத்தமது வீடுகளில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்யை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் மதுரங்குளி, முக்குதொடுவாய் பகுதியைச் சேர்ந்த நில்ஷானி சுமோதிகா என்ற 19 வயதுடைய யுவதியும், காதலனுமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உடப்பு, சின்னப்பாடு பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய லசிது லிவேரா என்ற இளைஞன் தற்கொலை செய்து கொண்ட யுவதியுடன் நெருங்கி பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இருவரும் பாடசாலைக்காலம் முதல் காதல் உறவில் இருந்துள்ளனர். லசிது கடந்த 27ஆம் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உடப்பு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞனின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த 19 வயதுடைய நில்ஷானி கடந்த 30ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டதைப் போன்று தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறுகளின் தொடர்ச்சியாக காதலன் தற்கொலை செத நிலையில், காதலியும் உயிரிழந்துள்ளமை உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.