காதலி மீது சந்தேகம் – பேருந்திற்குள் நுழைந்து பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்- நுவரெலியாவில் சம்பவம்

0
147

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கி காயப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் காதலி என கூறப்படும் யுவதியுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் காதல் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகநபர் தவறாக புரிந்து கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here