புத்தளம் கருவலகஸ்வெவ கல்வில பூங்காவில் காயங்களுக்கு உள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதிக்குச் சென்று யானையை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது நிகவெரட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு யானைக்கு 3 நாட்களாக சிகிச்சையளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குறித்த யானை உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்த காட்டு யானை 25 வயதுடையது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.



