அட்டன் கல்வி வலயம் கார்பெக்ஸ் கல்லூரி மாணவர்கள் 34 பேர் உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் கணித பாடத்தில் 95 வீதம் பெற்று 14 பேர் A சித்தி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் வீ .உதயகுமார் தெரிவித்தார்.2017 ம் ஆண்டுக்கான க.பொ.த சா.த பரீட்சையில் 44 பேர் பரீட்சைக்கு தோற்றி 35 பேர் சித்தி பெற்று 80 வீத வெற்றியை பெற்றுள்ளனர்.
கே. கிரிசாந்தன் 6 ஏ. 2.பி. 1.சி யுடன் சிறப்பு சித்தியை பெற்றுள்ளதாவும் கல்லூரி அதிபர் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்