கார் பந்தயத்தில் அஜித் அணி 3 ஆம் இடம்!

0
134

நடிகர் அஜித் குமார் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம்  இடத்தைப் பிடித்துள்ளது.

குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் டுபாயில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்தது. தொடர்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயங்களில் போட்டியிட்டு கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றனர்.

இந்நிலையில், நேற்று (29) ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்ட அஜித் குமார் அணியினர் 3 ஆம் இடம் பிடித்துள்ளனர்.

விருது நிகழ்வின்போது அஜித்தின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு அவரை உற்சாகப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here