ரேப்பர்கள் மற்றும் பாக்கெட்டுகளில் காலாவதி திகதியை மாற்றி இந்த இனிப்புகளை வணிக நிறுவன நிர்வாகம் விற்பனை செய்யப்படுகின்றது.
கண்டியில் உள்ள முன்னணி வர்த்தக ஸ்தாபனமொன்றில் காலாவதியான டோஃபிகள் மற்றும் சொக்லேட்கள் என்பன கடந்தவாரம் 14ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.இதனடிப்படையில், குறித்த வர்த்தக நிலைய நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த வணிக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.
மாநகர சுகாதார திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பதப்படுத்தப்பட்ட மற்றும் காலாவதியான டோஃபிகள் மற்றும் சொக்லேட்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
ரேப்பர்கள் மற்றும் பாக்கெட்டுகளில் காலாவதி திகதியை மாற்றி இந்த இனிப்புகளை வணிக நிறுவன நிர்வாகம் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், தயாரிக்கப்பட்ட திகதி அல்லது உற்பத்தி நாடு கூட ரேப்பர்களில் குறிப்பிடப்படவில்லை என்றும் தலைமை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.