காலி – டிக்சன் வீதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத் துப்பாக்கிப் பிரயோகம் இன்றிரவு(23) இடம்பெற்றுள்ளது.
டிக்சன் வீதியில் கார் ஒன்றில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இந்தத் துப்பாக்கி பிரயோகத்தை நடாத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காரில் பயணித்த வர்த்தகர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.