காலி மாநகர சபையில் இன்று (30) இடம்பெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது.
சபையின் நடவடிக்கைகளை மேயர் முன்னெடுத்துச் சென்றபின்னர், குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியும், “திருடன் திருடன் எமது வாக்குகளை கொள்ளையடித்தான்” என்று கோஷமிட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இச் சூழ்நிலையைத் தொடர்ந்து சபையை அரை மணி நேரத்துக்கு ஒத்திவைத்த மேயர், சபையிலிருந்தும் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




