காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்

0
155

காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை சூழவுள்ள வளாகம்,பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 12.30 அளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலி முகத்திடலுக்கு பிரவேசிக்கும் சகல வீதிகளிலும் வீதி தடைகளை ஏற்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையும் அந்த வீதித் தடைகள் அகற்றப்படாதுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. சம்பவத்தின் போது காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆயுதம் தரித்த இராணுவத்தினரை கடமைகளில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்கா, கனடா உட்பட்ட நாடுகள் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here