கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (AASL) நிறுவனத்தின் பணியாளர் ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ.210 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
54 வயதான குறித்த நபர், 5.94 கிலோ எடையுள்ள 24கரட் தங்க பிஸ்கட்களை வைத்திருந்த போது , விமான நிலையத்தின் பணியாளர் வெளியேறும் வாயிலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரது காலுறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.