காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன…?

0
186

தற்போது மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களில் இருந்து உடலை காப்பது மிகவும் முக்கியமானது. முன்னோர்கள் சத்தான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் நமக்கு கொடுத்தனர். ஆனால் இந்த நிலைமை இப்போது மாறிவிட்டது. அதனால் தற்போதைய தலைமுறையினருக்கு நோய் எதிர்ப்புத் தன்மையும் குறைந்துள்ளது.தற்போதைய தலைமுறையினர் போதுமான அளவிற்கு நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். அதற்கு காரணம் உணவு பொருட்கள் அனைத்தும் கலப்படமாக மாறிவருவதும் ஒரு காரணம் ஆகும். விரும்பியதை உண்கின்றோம் என்ற பெயரில் துரித உணவுகளையும், அடைக்கப்பட்ட பேக்கட் உணவுகளையும் எடுத்துக்கொள்வதால் தேவையில்லாத உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல், சரியான நேரத்தில் தூக்கம் இல்லாமல் இருப்பதும் ஆகும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக காலை சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்கின்றனர். இதனால் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதால் அல்சர் உருவாக வாய்ப்பு உள்ளது.

சர்க்கரை நோய் வருவதற்கும் உணவு பழக்கவழக்கத்தில் மாறுபாடு இருந்தால் கட்டாயம் டைப்-2 சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. மேலும் தேவையான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருந்தால் கட்டாயம் மன அழுத்தம் போன்றவை வர வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை காலை நேர உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here