கோடைக்காலம் ஆரம்பித்தவுடன் பல இடங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.ஊர்கள் ரீதியிலும் ஒவ்வொரு அமைப்புக்கள், திணைக்களங்கள் ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.அந்தவகையில் கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக மாவட்ட அடிப்படையில் கிரிக்கெட் போட்டி ஒன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் மத்தியமாகாணத்திற்கு உட்பட்ட மாத்தளை,நுவரெலியா, கண்டி மாவட்டங்கள் பங்குப்பற்றியது.
10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் மாத்தளை மாவட்டத்தை வீழ்த்தி நுவரெலியா மாவட்டம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.இந்நிகழ்வில் மூன்று மாவட்டங்களின் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்