கால்பந்து வீரர் சுட்டுக் கொலை!

0
62

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் சர்வதேச அளவில் பார்சிலோனா டி குவாயாகில் என்று அழைக்கப்படும் பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் டிஃபெண்டராக இருக்கிறார்.

இவர் தனது கால்பந்து பயணத்தை இன்டிபென்டியென்ட் டெல் வாலே கிளப்பில் (2010- 2015) தொடங்கினார். அடுத்து 2016- 2025 வரை பார்சிலோனா ஸ்போர்ட்டிங் கிளப்பில் ஒப்பந்தம் ஆனார்.

இவரது கொலைக்கு கிளப் அணியினரும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார்கள்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here