மத்திய காஸாவில் நீர் சேகரிப்பு மையத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு சிறுவா்கள் உட்பட 10 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
காஸாவின் நுசைரத் அகதிகள் முகாமில் உள்ள நீர் விநியோக மையத்தில் இஸ்ரேல் படையினா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். இதில் ஆறு சிறுவா்கள் உட்பட 10 பலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.
காஸாவில் பரவி வரும் பஞ்சத்தால் உணவு, தண்ணீா் பற்றாக்குறையால் மக்கள் தவித்துவரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் 16 போ் காயமடைந்தனா்.
காஸாவில் நீா் சேகரிக்க வருபவா்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களில் மக்கள் தண்ணீா் பெற முயன்றபோது நேரடியாக, வேண்டுமென்றே தாக்கப்பட்டது இது சுமார் பத்தாவது முறைய என்று அதிகாரிகள் கூறினா்.