இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் காஸாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தகவலை பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸாவில் வான்வழி, கடல் வழி தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது.
மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், மருந்தகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 328 பேர் பலியாகியுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில், 4 ஆயிரத்து 237 பேர் குழந்தைகள். (a)