கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கிகிலியமன 3ம் கட்டையில் மரமொன்று முறிந்து விழுந்ததில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. 30/05/2021 காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ளன. மேலும் இரு மரங்கள் உடையும் தருவாயில் இருப்பதாகவும் மறுபடி முறிந்து விழுவதற்கு முன்னர் குறித்த மரங்களை அப்புறப்படுத்துமாறு குறித்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலமேகம் பிரசாந்த்