திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, கிண்ணயா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சாக்கேணியில் நேற்று குறித்த மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.