கினிகத்தேனையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

0
176

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ ஹத்லாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் 19.04.2018 அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் சுனில் வனிகசேகர திஸாநாயக்க வயது 59 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவதாகவும் என தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் (18.04.2018) நேற்று அல்லது (17.04.2018) நேற்று முன்தினம் நடத்திருக்கூடும் எனவும் தெரிவித்தனர். எனினும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த உயிரிழந்த நபர் வீட்டிலிருந்து வெளியே வராததனையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பாரத்த போது அவர் கீழே உயிரிழந்து கிடப்பதனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

01 DSC05887 DSC05902 DSC05905 DSC05908 DSC05916

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என கினிகத்தேனை பொலிஸாரும், அட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here