நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை தியகல சந்தியின் ஊடாக நோட்டன்பிரிட்ஜ் செல்லும் பிரதான வீதியில் அட்லிஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் பகுதியிலிந்து நோட்டன்பிரிட்ஜ் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து நோட்டன்பிரிட்ஜ் பகுதியை நோக்கி சென்ற டிப்பர் லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 26.02.2018 அன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருமே காயங்களுக்குள்ளாகிய நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை நோட்டன்பிரிட்ஜ் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)