கினிகத்தேனையில் பாரிய மண் மேடு ஒன்று சரிந்துவிழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு!!

0
191

மலையகத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக கினிகத்தேன பகுதியில் உள்ள இந்து ஆலயத்திற்கு அருகாமையில் பாரிய மண் மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குரத்து பாதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்இந்த சம்பவம் 07.06.2018. வியாழகிழமை மாலை 05மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் இதனால் அட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்கவரத்து பாதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேவேலை குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினை அகற்றுவதற்கு வீதி அதிகார சபையின் உதவியடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும் நாவலபிட்டி கினிகத்தேன பிரதான வீதியின் மீபிட்டிகம பகுதியிலும் மண் மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவினை அகற்றும் வரைக்கும் குறித்த வீதியின் போக்குவரத்து தடைபட்டிருப்பதாகவும் குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் மிக்க அவதானத்துடன் பயணிக்கமாறு நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Untitled

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here