சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருவந்து கஞ்சா பக்கட்கள் 27.04.2018 அன்று வெள்ளிக்கிழமை இரவு அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன.
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் 27.04.2018 அன்று இரவிலிருந்து 28.04.2018 அன்று காலை வரை வாகனங்களை அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.
இதன்போது 7 பேரிடமிருந்து 6900 மில்லிகிராம் கஞ்சா பக்கட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த 7 பேரையும் கைது செய்த அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)