அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பிளக்வோட்டர் தோட்டத்தில் இதுவரை காலமும் எவ்விதமான அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படாத காரணத்தினால் இந்தத் தோட்டத்துக்கு சில அபிவிருத்திட்டங்களை தனது அமைச்சின் ஊடாக முன்னெடுக்குமாறு அமைச்சர் திகாம்பரம் வழங்கியுள்ள பணிப்புரைக்கேற்ப மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் பிளக்வோட்டர் கீழ்ப்பிரிவு மற்றும் மேற்பிரிவு தோட்டத்துக்கு விஜயம் செய்தார்.இவருடன் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜின் இணைப்பாளர் எஸ்.பி சதீஸ் உட்பட தோட்டத் தலைவர்களும் சென்றனர்.
இந்தத் தோட்டங்களில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிளக்வோட்டர் மேற்பிரிவு தோட்டத்தில் குடிநீர் திட்டம் மற்றும் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பாதையொன்றையும் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சின் ஊடாக நிதியைப்பெற்று நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் திகாம்பரத்துக்கு தோட்ட மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்



