கினிகத்தேன விபத்தில் கொழும்பு ஜனிரா இக்ரம் பலி!

0
4

கினிகத்தேன பொலிஸ் பிரிவின் மில்லகஹமுல்ல பகுதியில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற  மோட்டார் சைக்கிள், அதே வீதியில்  பயணித்த லொரியை முந்திச் செல்ல முயன்றபோது கவிழ்ந்தது.

இந்த சம்பவம் வியாழக்கிழமை( 31) அதிகாலை 05.30 மணியளவில், இடம்பெற்றுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் கொழும்பு 10, மொஹிதீன் மஸ்ஜித் வீதி  இக்ராம் மிஸ்கி மற்றும் அவரது மனைவி ஜனிரா இக்ராம் ஆகியோர் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து லொரியின் பின் சக்கரத்தின் கீழ் நசுங்கிய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் இக்ராம் மிஸ்கிக்கு லேசான காயம் ஏற்பட்டு கினிகத்தேன மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பந்மாக கினிகத்தேன பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here