கினிகத்ஹேன பேருந்து தரிப்பிடத்திலிருந்து நாவலப்பிட்டி வரை சேவையில் ஈடுபடுகின்ற தனியார் மற்றும் அரச பேருந்துகள் அனைத்தும் வியாழக்கிழமைகளிலும் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபை பணித்துள்ளது.
இதன் காரணமாக பேருந்துகளை நிறுத்திவைக்க தங்களுக்கு இடவசதி இல்லையென பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், வீதியில் பேருந்துகள் நிறுத்தப்படும் குற்றத்திற்கு எதிராக காவல்துறையினால் தண்டப்பணம் அறவிடப்படுகின்றமையினால் தாம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.