இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே என்பவர், நடைப்பயிற்சி இயந்திரத்தில் 12 மணி நேரம் மற்றும் 24 மணி நேரத்தில் வேகமாக ஓடி இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார்
இந்த சாதனை முயற்சி மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலகே திசாநாயக்க உள்ளரங்கில் ஆரம்பித்தது.
இதன்போது, அவர் சவாலை வெற்றிகரமாக முடித்து, இரண்டு சாதனைகளையும் நிகழ்த்தினார்.
இலங்கை கடற்படை அவரது சாதனையை அங்கீகரித்துள்ள நிலையில், அவரது சகிப்புத்தன்மை மற்றும் உறுதியை மெச்சியுள்ளது.