நாட்டில் தற்போது உள்ள பயணக்கட்டுப்பாடு நிலைமை காரணமாக நுவரெலியா பிரதேசத்திற்கு உட்பட்ட கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட கார்லிபோக், தம்பகஸ்தலாவ, எவோகா கிரிமிட்டி, டெஸ்போட் A, B, டெஸ்போட் டிவிசன் போன்ற தோட்டங்களுக்கான பொது மக்கள் நகரங்களுக்கு செல்லாமல் கிராமத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை பெற்றுக்கொள்ள 04 வர்த்தக நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி கார்லிபோக்கில் ஒரு வர்த்தக நிலையமும், எவோகா கிரிமிட்டி போன்ற இடங்களில் உள்ளவர்களுக்கு கிரிமிட்டியில் ஒரு வர்த்தக நிலையமும், டெஸ்போட்டில் இரண்டு வர்த்தக நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் வர்த்தக நிலையங்கள் கிரிமிட்டி கிராம சேவகர் ஊடாக நுவரெலியா பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் இயங்கி வருகிறது. தெரியாதவர்கள் இவ் நான்கு வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்களை பெற முடியும் இவ் வர்த்தக நிலையங்களுக்காக இரண்டு வாகனங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் போது தமது வீட்டுக்குப் பொருட்களை கொண்டு வந்து தரப்படும். அதற்கு கட்டனம் அரவிடபடும்.