சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்த வழக்கை டிசம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று(26) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து வழக்கு அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையில் ரக்பியை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான ‘கிரிஷ்’ நிறுவனத்திடமிருந்து ரூ. 70 மில்லியன் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




