எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பிரீத்தி அஸ்ரானி அப்படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
‘பிரஷர் குக்கர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரீத்தி அஸ்ரானி. தமிழில் இவர் நடித்த அயோத்தி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. தற்போது இவர் கவினின் கிஸ் படத்திலும், எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் பல்டி படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், “கில்லரில் நான் ரொம்ப வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறேன். அந்த மாதிரி கேரக்டரில் நான் நடித்ததே இல்லை. இப்படத்திற்கு 80 பேர் ஆடிஷன் வந்தார்கள். எஸ்.ஜே.சூர்யா சார் என்னை தேர்ந்தெடுத்ததை பாக்கியமாக நினைக்கிறேன். எஸ்.ஜே.சூர்யாவோட நடிக்க கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது ” என்றார்.