டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு வருகைத்தரும் நோயாளர்களின் நலன் கருதி தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திமொன்று 09.08.2018 திறந்து வைக்கப்பட்டுள்ளது
மக்கள் வங்கியினரினால் வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தன்னியக்க பணப்பரிமாற்றம் இயந்திர திறப்பு விழா நிகழ்வில் மக்கள் வங்கி அதிகாரிகள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலைக்கு வருகைத்தரும் நோயாளர்கள் அவசர பணத்தேவையை பெற்றுக்கொள்ள அட்டன் நகரத்தை நாடவேண்டியிருந்த நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தன்னியக்க பணப்பரிமாற்றம் இயந்திரத்தினூடாக அதிக நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.