கிளனமேரா த.வி சிறுவர் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய பார்வை!!

0
153

கிளனமேரா த.வி சிறுவர் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய பார்வை!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கிளனமேரா த.வி சிறுவர் விளையாட்டுப் போட்டிகள் இன்றைய தினம் கிளனமேரா சந்திரசேகரன் மைதானத்தில் நடைபெற்றது.

அதிபர் யசோதரன் இறுதியாக அதிபர் பதவி வகித்து தலைமை தாங்கும் நிகழ்வாகவும் அமைந்தது. அத்தோடு இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மேலதிக வலயக் கல்விப்பணிப்பாளர் மோகன் ராஜ் சிறப்பிக்க ஆரம்ப கல்வி பணிப்பாளர் செல்வராஜ் ஆரம்பம் முதல் இறுதிவரை போட்டி நிகழ்வை சிறப்பித்தார். உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் இரவீந்திரன் பிரதம தீர்ப்பாளராக கலந்து சிறப்பித்தார்.அவரோடு ஆசிரியர்கள் விஷ்வா, அமர்,மோகன்,சிவக்குமார், அவர்களோடு ஆசிரியைகளும் கடமையாற்றினர்.

பாரதி த.வி பேண்ட் இசைகுழுவின் முழகத்துடன் பிரதம அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர். ஆசிரியர் சுரேன் பேன்ட் குழுவினை நெறியாள்கை செய்தமை சிறப்பசமாகும். ஆரம்பக்கல்வி மாணவர்களின் வரவேற்பு நடனமும் கண்காட்சிஉடலியகச் செயற்பாடும் அணி நடை வகுப்பும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஆசிரியர் ஷான் , மோகன் மற்றும் பெணடிக் தொகுத்து உயிரோட்டம் வழங்கினர். குறிஞ்சி , முல்லை ஆகிய இல்லங்கிடையே நிலவிய சிறுவர் விளையாட்டு போட்டில் குறிஞ்சி இரண்டாம் இடத்தையும் முல்லை ஜெம்பியன் பட்டத்தையும் சூடியது.

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here