கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிப்புகுள்ளாகிய மலையாழபுர மக்களுக்கான 20 லட்ச ரூபா பெறுமதியான நிவாரண பொருட்களுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை கையளித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ். அருமநாயகம், கரைச்சி பிரதேச செயலாளர் முகுந்தன,; அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் மற்றும பலரும் கலந்து கொண்டனர். மேலும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் கலந்து கொண்டார்.