பிரபல நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் கிளி வளர்த்ததற்காக ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பொதுவாகவே மரம், செடி மற்றும் செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசைப்படுவார்கள். நாய் பூனை, இல்லாமல் எந்த வீடும் இருக்காது.
அதிலும் குறிப்பாக சினிமா நடிகர்கள் என்றால் தங்கள் இல்லங்களில் மரங்களை நடுவது செல்லப்பிராணிகளை வளர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதுடன் அதனை சமூக வலைத்தளங்களில் வெளிடுவதும் அலாதிப்பிரியம்.
அந்த வகையில் நகைச்சு நடிகர் ரோபோ சங்கர் தனது வீட்டில் அலக்ஸ்சான்ரின் கிளி (Alexandrine Parakeet) வளர்த்து வந்துள்ளார்.
இது பற்றி அறிந்த வனத்துறையினர் ரோபோ சங்கருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
ஏனெனில் வனத்துறையினரின் அனுமதியின்றி கிளி வளர்த்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.