கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு கோரிக்கை

0
25

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி.சசிதரன் கையொப்பமிட்டு அரசாங்கத்திற்கு மிக அவசரமான வேண்டுகோள் கடிதம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், ”கிழக்கு மாகாணம், மட்டக்களப்பில் பதினாறு நாட்களாக தெருவில் நின்று பல்கலைக்கழக பட்டத்தைப் பெற்றவர்கள் போராடுகின்றனர்.

இவர்கள் எம்மிடம் கற்ற பிள்ளைகள். பல்கலைக்கழகம் சென்று தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டுமென்பதற்காகவே இவர்களுக்கு நாம் கற்பித்தோம்.

ஆனால் பல்கலைக்கழக பட்டம் பெற்ற இவர்கள் வேலைவாய்ப்பின்றி தெருவில் நின்று போராடுவதென்றால், பல்கலைக்கழக பட்டத்தை வைத்து என்ன செய்யமுடியும்? அவ்வாறெனில் பல்கலைக்கழகங்கள் ஏன் பட்டங்களை வழங்குகின்றன? இந்த நாட்டில் பல்கலைக் கழகங்கள் எதற்காக? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் துறை சார்ந்த பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை.மாணவர்கள் குறித்த பாடங்களை குறிப்பிட்ட வகுப்புகளில் கற்காமலேயே அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வகுப்பேற்றம் செய்யப்படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் நிறையவே உள்ளன. வழங்கப்படவேண்டிய நியமனங்களும் முறைகேடுகளால் இழுத்தடிக்கப்படுகின்றன“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here